You are here

முகத்தில் காறி உமிழ்ந்த கோஸ்டா பகிரங்க மன்னிப்பு

டுரின்: இத்தாலியின் டூரின் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஒரு காற்பந்தாட்டத்தில் யுவென் டஸ் அணியின் டக்ளஸ் கோஸ்டா, எதிரணியான சசூ வோலோ அணியின் ஃபெடெ ரிகோ டி ஃபிரான்செஸ்கோவின் முகத்தில் காறி உமிழ்ந்ததால் வெளியேற்றப்பட்டார். அவரது அந்தச் செயலுக்காக நேற்று மன் னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். தனது இந்த தவறான செயலுக்காக யுவென்டஸ் ரசிகர் களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“நல்லது கெட்டது எது வானாலும் எனக்குத் தோள் கொடுக்கும் சக ஆட்டக்காரர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மிகவும் கேவலமாக நடந்துகொண்டேன் என்பதை நான் இப்போதுதான் உணர்கிறேன். அதற்காக அனை வரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த ஒரு சம்பவத்தை எனது காற்பந்து வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி விடாதீர்கள்,” என்று கேட்டுக் கொண்டார். பயிற்றுவிப்பாளர் மாஸ்ஸி மிலியானோவுக்கு எரிச்சலூட்டும் வகையில் கோபத்தை வெளிக் காட்டிய செயலுக்காக கோஸ்டா வின் தடை மேலும் நீட்டிக் கப்பட்டுள்ளது.

ஃபெடெரிகோவின் முகத்தில் காறி உமிழ்ந்த டக்ளஸ் கோஸ்டா சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்படுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்