எஃப்1: வேகமும் இல்லை வாய்ப்பும் இல்லை என்கிறார் வெட்டல்

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாளர் பட்டத்தை வெல்ல முடியவில்லை என விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் ஃபெராரி குழுவின் செபாஸ்டியன் வெட்டல் (படம்). வெற்றியாளர் லூவிஸ் ஹேமில் ட னுடன் ஒப்பிடுகையில் சிறிய வித்தியாசம்தான். இருப் பினும் அது வெட்டலின் வேத னைக்கு வழிவகுத்துவிட்டது. மரினா பே ஸ்திரீட் பந்தயச் சுற் றில் நடந்த மூன்றாவது பந்தயத்தை நிறைவுசெய்யும் தறுவாயில், வெற்றி யாளர் பட்டத்தைத் தட்டிச் செல்ல லூவிஸுக்குக் கிடைத்த அளவுக்கு வெட்டலுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. இந்த வெற்றியின் மூலம் லூவிஸ், வெட்டலைக் காட்டிலும் 40 புள்ளிகள் கூடு தலாகப் பெற்று முதல் நிலையில் நீடிக்கிறார். அதிசக்தி வாய்ந்த காற்றாய்ப் பறக்கும் வீரக் குதி ரையான தனது ஃபெராரியால் 21 வளைவுகளையும் 61 சுற்றுக ளையும் கடந்து சாதிக்க முடிய வில்லை என் பது தனக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது என்று தனது விரக்தி யையும் வேதனை யையும் வெளிப் படுத்தி யுள்ளார் 31 வயது வெட்டல்.

வெட்டலின் ஃபெராரியைக் காட்டிலும் லூவிஸின் மெர்சிடிஸ் குறைந்த சக்தியைக் கொண்டது என்று கூறப்படுகிறது. உலக வெற்றியாளர் பட்டத்தை நான்கு முறை வென்றவர் வெட்டல் என்பது குறிப்பிடத்தக்கது. "ஒட்டுமொத்தத்தில் எங் களுக்கு வேகம் போதாது, இந்தப் பந்தயத்தில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு செல் வதற்கு முடியவில்லை," என்றார் வெட்டல். "பந்தயத்தில் எங் களுக்கு முன்னுக்குச் செல் வதற் கான வாய்ப்புகள் இல்லை என்று தான் கூறவேண்டும். இருப் பினும் எங்களது வேகத்தைக் காட்டுவ தற்குக் கூடுதலாக ஏதேனும் முயற்சி செய்திருக்கலாம். அந்த அளவுக்கு நாங்கள் எங்களை விரைவுபடுத்த முடியவில்லை என்றே கூறவேண்டும்," என்று கூறினார்.

"வெற்றி தோல்வி என்பது எங்களுக்குள் மட்டுமே இருக்கும் என்று இந்த வார இறுதிக்கு முன்பு தெரிவித்திருந்தேன். ஆனால் இந்த வாரயிறுதியில் நாங்கள் எதிர்பார்த்தது எங்களுக்குக் கிடைக்கவில்லை என்றே எண் ணுகிறேன்," என்றார். வெற்றிக்குச் சரியான முறையில் வியூகம் வகுக்காததற்கு தனது குழுவை வெட்டல் குறை கூற மறுத்துவிட்டார் வெட்டல். மாறாக தனது குழுவைத் தற் காத்துப் பேசினார்.

"போரில் எதிரியைத் தாக்குவது போன்று செயல்பட வேண்டும் என்று தீர்மானித்தோம். அந்த வியூகம் வெற்றிக்கு வழிவிட்டிருந் தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அது எங்களுக்குக் கைகொடுக்கவில்லை," என்றார். "வெற்றிக்கான வழியைக் கண் டோம். அதை எப்படியாவது எட்டி விட வேண்டும் என்றுதான் முனைப்புக் காட்டினோம்.

அதற் காக நாங்கள் மனஉறுதியுடன் போராடினோம். இருப்பினும் அதற்கு போக்குவரத்து இடங் கொடுக்கவில்லை," என்று தனது வேதனையுடன் கூறினார். "அந்த இடைஞ்சல், கொஞ்சம் கொஞ்ச மாக நேரத்தை விழுங்கத் தொடங்கியது. அது எங்களுக்கு வேதனையைத் தந்தது. "இருப்பினும் விடமாட்டோம். இங்கு நாங்கள் வந்தது பத்துப் புள்ளிகளை இழப்பதற்கு அல்ல. "இன்னும் வெற்றி வாய்ப்புகள் மூலம் நாங்கள் எடுக்கவேண்டிய புள்ளிகள் ஏராளமாக இருக்கின் றன," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வெட்டல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!