You are here

‘இந்தியாவைத் தோற்கடிக்க மிகச் சிறப்பாக விளையாட வேண்டும்’

துபாய்: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா வுக்கு எதிராக வெற்றி பெற மிகச் சிறந்த ஆட்டத்தை தமது அணி வெளிப்படுத்துவது அவசியம் என்று பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃப்ராஸ் அகமது தெரிவித்தார். ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கைச் சந்தித்தது. பாகிஸ்தான் மிகச் சிறப்பாக பந்துவீச, 37.1 ஒவர்களில் 116 ஓட்டங்களுடன் சுருண்டது ஹாங்காங். அதனைத் தொடர்ந்து பந்தடித்த பாகிஸ்தான், 23.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் உஸ்மான் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று நடப்பு வெற்றியாளரான இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது.

இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. ‘ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் முழுமையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினோம். இருப் பினும், இன்னும் சில விஷயங் களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் போட்டியில் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் நாங்கள் 9 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டு களை வீழ்த்தி இருக்க வேண்டும். தொடக்கத்தில் பந்து ‘ஸ்விங்’ ஆகவில்லை. இதனை நாங்கள் எங்களுக்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்கிறோம். இந்தியா வுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு இதனைச் சரிசெய்ய எங்களுக்கு நேரம் இருக்கிறது. “இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் நாங்கள் எங்களுடைய மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்,” என்று சர்ஃப்ராஸ் தெரிவித்தார்.