You are here

திடீர் மின்தடை; எரிசக்தி சந்தை ஆணையம் விளக்கம்

கிட்டத்தட்ட 147,000 பேரைப் பாதித்த திடீர் மின்தடைக்கு, ‘செம்ப்கார்ப் கோஜன்’, ‘செனோக் கோ எனர்ஜி’ ஆகிய மின்சக்தி நிறுவனங்களின் மின் உற்பத்தி நிலையங்களின் செயலிழப்புதான் காரணம் என்று எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்து இருக் கிறது. ‘செம்ப்கார்ப்’ நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்று முதலில் செயலிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தததாக எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்தது.

“மின் உற்பத்தி நிலையம் ஒன்று செயலிழந்தால், இயக்கத்தில் உள்ள மற்ற நிலையங்கள் சுயமாகவே மின் உற்பத்தியை அதிகரிக்கும்,” என்று ஆணையம் தெரிவித்தது. செனோக்கோவுக்குச் சொந்த மான மற்றொரு நிலையம், மின் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டிருந்தபோது இது திடீரென செயலிழந்தது. இந்த இரண்டு நிலையங்களின் செயலிழப்பால், தேவைக்கு ஏற்ற அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் மின்சார கட்டமைப்பில் உள்ள பாதுகாப்புக் கருவிகள் நிலைமையைச் சமாளிக்க சுயமாக மின் இணைப்பைத் துண்டித்தன என்று ஆணையம் தெரிவத்தது.