You are here

புல்லட் ரயில் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு; ஜப்பானிய அரசுக்கு விவசாயிகள் கடிதம்

அஹமதாபாத்: பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மும்பை-அஹ மதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு ஆரம்பக் கட்டப் பணிகள் நடந்து வரு கின்றன. இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்து வரும் குஜராத் மாநில விவ சாயிகள், நிதியுதவி அளிக்க வேண்டாம் என்று ஜப்பானிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள் ளனர். ஜப்பான் உதவியுடன் 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள புல்லட் ரயில் சேவை முறையை 2022ஆம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள் ளது. இந்தத் திட்டத்தால் நாட்டில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என மத்திய அரசு நம்புகிறது. ஆனால் ரயில் திட்டத்திற்கு நிலப்பகுதிகளை அரசு கையகப் படுத்தி வருவதால் இதில் பாதிக் கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் போர்க்கொடி உயர்த் தியுள்ளனர்.

மேலும் நிலம் கையகப் படுத்துவதற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். மனுவில் 2013ஆம் ஆண்டின் விவசாய நிலத்தை கையகப் படுத்தும் சட்டத்தை முறைகேடாக மாற்றி குஜராத் அரசு மோசடி செய்கிறது என்றும் எந்தவித கருத்தும் விவசாயிகளிடம் கேட் காமலே ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித் துள்ளனர். ஆயிரக்கணக்கான விவசாயி களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இந்தத் திட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்தத் திட்டத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. மும்பை-அஹமதாபாத் திட்டத் துக்காக சுமார் 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதனால் 6,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

2017ல் ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபேயும் பிரதமர் மோடியும் சந்தித்து புல்லட் ரயிலில் பயணம் செய்தபோது புதிய ரயில் திட்டத்தை அறிவித்தனர். கோப்புப் படம்: ஏஎஃப்பி