You are here

மதுரை மத்திய சிறையில் போலிசார் அதிரடி சோதனை

மதுரை: மத்திய சிறையில் போலி சார் நடத்திய திடீர் சோதனை காரணமாக மதுரையில் பரபரப்பு நிலவியது. இந்தச் சோதனை நடவடிக்கையில் 150க்கும் மேற் பட்ட போலிசார் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் கடும் குற்றங்களுக் காகத் தண்டனை பெற்றுள்ள கைதிகள் சிலர் சொகுசு வாழ்க் கையை அனுபவித்து வருவதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக சென்னை அருகே உள்ள புழல் மத்திய சிறையில் கைதிகளின் அறையில் சொகுசுக் கட்டில் மெத்தை, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை இருப்பது அம்பலமானது.

அக்கைதிகள் விலை உயர்ந்த கைபேசி, ஆடைகள் ஆகியவற்றைப் பயன் படுத்துவதும், வெளிநாடுகளில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதும் தெரிய வந்தது. இதையடுத்து புழல் சிறையில் போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள், பழச்சாறு பிழியும் கருவி, சமையல் பாத்திரங்கள், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பறிமுதல் செய்தனர். ஐந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

புழல் சிறையை அடுத்து தமிழ கம் முழுவதும் உள்ள வேறு சில சிறைச்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக சிறைக்காவலர்கள், அதிகாரிகள் பலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மதுரை மத்திய சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நீடித்த இந்தச் சோத னையின்போது பல்வேறு பொருட் களைப் போலிசார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் இரு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட போலிசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.