புதிய திட்டங்களுடன் சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம்

சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கத்தின் 47வது ஆண்டின் புதிய செயற்குழுக் கூட்டம் கடந்த மாதம் 26ஆம் தேதியன்று கூடியது. அதில் சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கத்தின் புதிய தலைவராக திரு குணசீலன் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக திரு செல்வராஜு, கௌரவ செயலா ளராக திருவாட்டி உஷாராணி பாலகிருஷ்ணன், துணைச் செயலாளராக திரு நாச்சியப்பன், கௌரவப் பொருளாளராக திரு ஐசேக் ஜே, துணைப் பொருளா ளராக திரு கோவிந்தராஜன் ஆகியோருடன் மேலும் ஆறு பேர் செயற்குழுவின் புதிய உறுப் பினர்களாகத் தேர்வுபெற்றனர்.

இச்செயற்குழு பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றத் தீர்மானித்துள்ளது. அதில் 48 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் இலங்கை, மலேசிய அமைப்புகளுடன் சிறந்த நட்புறவைப் பேணிக்காப் பதோடு மட்டுமல்லாமல் அவர் களோடு இணைந்து தமிழர் பண்பாடு, பாரம்பரியக் கலை களை மேம்படுத்துவது போன்ற பல திட்டங்களை முன்மொழிந் துள்ளது. அத்துடன், மூத்த கலைஞர் களைக் கெளரவிப்பது, அவர் களின் உடல்நலன்களைப் பேணிப் பாதுகாப்பது, இளைய கலைஞர்களுக்கு ஊக்கமளிப்ப துடன் சிறப்புப் பயிற்சியும் கொடுத்து மேடை ஏற்றுவது போன்றவையும் புதிய திட்டங் களில் அடங்கும் என்று கலைஞர் சங்கம் தெரிவித்தது. தொடக்கத்தில் நடிப்பை மட்டுமே மையமாகக்கொண்டு இயங்கிவந்த சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம், இனி இயல், இசை, நாடகம் என அனைத்துக் கலைத்துறைக ளிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குணசீலன் (நடுவில் அமர்ந்திருப்பவர்) தலைமையில் சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கத்தின் புதிய செயற்குழு. படம்: சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!