சிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்

வைதேகி ஆறுமுகம்

தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள ‘எஸ்பயர்’ எனும் பத்து வாரத் திட்டத்தைத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் சென்ற ஆண்டு தொடங்கியது. இதில் மாணவர்களுக்குத் தேவையான தன்முனைப்பை வளர்த்துக்கொள்ள நடவடிக்கைகள் நடத்தப்பட்டன அதுமட்டுமின்றி, மாணவர்கள் தலை மைத்துவத் திறனைப் பெறவும் இன்னொரு திட்டத்தை சிண்டா நடத்தியது. மாணவர்களுக்குத் தன்விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிண்டாவின் தலை மைத்துவத் திட்டத்தின் இலக்கு.

இந்தத் திட்டம் கடந்த நான்கு ஆண்டு களாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் சிறப்பு அம்சமாக தலைமைத்துவத் திட்டமும் ‘எஸ்பயர்’ திட்டமும் அனைத்து தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்காக நடத்தப் படுகின்றன. இவ்விரண்டு திட்டங்களிலும் தொழில் நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவரான 19 வயது விஷ்ணு வர்மன் நவீன் குமார் பங் கெடுத்தார். திட்டங்களின் மூலம் பல திறன் களையும் வாழ்க்கை நெறிகளையும் கற்றுக் கொண்டதாக அவர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

தமது பள்ளிக்கு நடனப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை சிண்டா அனுப்பி வைத்ததாக விஷ்ணு தெரிவித்தார். அந்தப் நடனப் பயிற்றுவிப்பாளரின் நடனத் திறனைக் கண்டு தாம் வியந்ததாக அவர் கூறினார். அதையடுத்து, நடனத் திறனை வளர்த்துக்கொள்வதற்காக ‘எஸ்பயர்,’ நிகழ்ச்சியில் விஷ்ணு சேர்ந்தார். அந்த நடனப் பயிற்றுவிப்பாளர் நடத்திய அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூச்சத்துடன் பங்கேற்ற விஷ்ணு, மூன்றாவது வாரத்தில் சக மாணவர்களுடன் நன்குப் பழகி உற்சாகத்துடன் நடனம் கற்றார். “நடனப் பயிற்சிக்கு அப்பாற்பட்டு என் பயிற்றுவிப்பாளர் அவரது வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

சிண்டாவின் திட்டங்கள் மூலம் பலன்பெற்ற சா. அபிநயா நிர்மலா தேவி (இடது), விஷ்ணு வர்மன் நவீன் குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்