You are here

நீண்டகால நிதியுதவி நாடும் குடும்பங்கள் அதிகரிப்பு

அரசாங்கத்திடம் இருந்து நீண்ட காலத்திற்கு நிதியுதவியை நாடும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதுமை அல்லது நோய்வாய்ப்பட்டிருத்தல், குடும்பத்தினரின் ஆதரவுக் குறைவு போன்றவற்றால் வேலைக் குச் செல்ல முடியாத மூத்த குடி மக்களின் எண்ணிக்கை கூடி இருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சால் நடத்தப்படும் அந்த நீண்டகால நிதியுதவித் திட்டத் தின்கீழ் 2017ஆம் நிதியாண்டில் 4,409 குடும்பங்கள் உதவி பெற் றன. முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,387ஆகவும் 2013ஆம் ஆண்டில் 3,568ஆகவும் இருந்தது. அமைச்சு நேற்று வெளியிட்ட ‘காம்கேர் ஆண்டு அறிக்கை 2017’ல் இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த 12 மாதங்களில் ‘காம்கேர்’ நிதி மூலம் 79,470 பேருக்கு மொத்தம் $131 மில்லி யன் நிதியுதவி அளிக்கப்பட்டது. இது 2016ஆம் நிதி ஆண்டைக் காட்டிலும் சற்றே அதிகம். அந்த ஆண்டில் 83,353 பேருக்கு மொத்தம் $130 மி. நிதியுதவி வழங்கப்பட்டது. சமுதாயப் பாதுகாப்பில் முக்கிய மானதொரு கட்டமைப்பாக ‘காம் கேர்’ கருதப்படுகிறது. சிரமப்படும் சிங்கப்பூரர்களுக்கு நீண்டகால அடிப்படையிலும் குறுகிய, நடுத்தர கால அளவிலும் இந்தத் திட்டம் மூலம் நிதியுதவி அளிக் கப்பட்டு வருகிறது.