You are here

உங்கள் கார்களை சிரமமின்றி விற்பதற்கு சிறந்த வழியைத் தேர்வு செய்யுங்கள்

பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்க விரும்பு வோர் தங்கள் பழைய வாகனத்தை பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் விரைவில் விற்பனை செய்வதற்கு அதை நல்ல ஒரு வாகன முகவரின் மூலம் ஏலத்தில் விடுவதும் ஒரு வழி. தங்கள் பழைய வாகனத்தை விற்க விரும்புவோர் பெரும்பாலும் வாகன முகவர்களையே நாடுவர். வாகனச் சந்தையில் ஏராளமான முகவர்கள் உள்ள­னர். எந்த முகவரிடம் சென்றால் அதிக லாபத்திற்கு பாதுகாப்பான முறையில் வாகனத்தை விற்க முடியும் என்பதை நாம் அறிந் திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு அறிந்துகொள்வதற்கு ஓர் ஆய்வே செய்யவேண்டியிருக்கும். இதுபோன்ற சிரமங்கள் ஏது மின்றி வீட்டில் இருந்துகொண்டே உங்கள் வாகனத்தை பாதுகாப்பான முறையில் விற்க வழிவகுத்துள் ளது கோட்ஸ் (Quotz). “எஸ்ஜிகார்மார்ட் குவாட்ஸ் (sg carmart Quotz). www.sgcarmart.com இணையத் தளத்தில் உங்கள் வாகனம் பற்றிய விவரங்களுடன் விளம்பரம் செய்து பயனடையலாம்.

“ஐநூறுக்கும் மேற்பட்ட முக வர்களைக் கொண்டுள்ள இந்த இணையத் தளத்தில் விளம்பரம் செய்த ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் வாகனத்தை நல்ல விலைக்கு விற்றுவிடலாம். “விற்ற தொகையின் காசோ லைக்காக நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. உங்கள் வாக னத்தை வாங்க இசைவோர் உடன டியாக இணையத்தளம் மூல மாகவே அதற்கான பணத்தைச் செலுத்தி விடுவர். உங்கள் வாகனத்திற்கான விற்­பனைத் தொகையை ஒரு மணி நேரத்திற் குள் நீங்கள் பெற்றுவிடலாம்;” என்கிறார் எஸ்ஜிகார் மார்ட் கோட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வின்சென்ட் டான். உங்கள் வாகனத்தை வாங்க விரும்பும் வாகன முகவரிடம் கோட்ஸ் (Quotz) நிறுவனமே பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் வாகனத்தை நல்ல லாபத்திற்கு விற்றுத் தரும். இந்த இணையத் தளத்தின் மூலம் பழைய வாகனம் வாங்கும் முகவர்கள் மட்டுமல்லாது நேரடியாக வாகனம் வாங்க விரும்பும் தனிப்பட்ட ஆட்களிடமும் நீங்கள் விற்பனை செய்யலாம்.