You are here

தொண்டூழியர்களின் உதவியுடன் 22,000 பேருக்கு அன்னதானம்

பல்லாயிரக்கணக்கான பக்தர் களுக்கு அன்னதானம் வழங்குவது இந்து கோயில்களின் சிறப்பாகும் என்றும் அது அவர்களின் கலா சாரத்தில் ஊறிய ஒன்றாக விளங்கு கிறது என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். சிராங்கூன் சாலையில் அமைந் திருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் நேற்று நடந்த புரட்டாசி விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். செப்டம்பர் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் தமிழ் புரட்டாசி மாத விழா மகா விஷ்ணுவுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

கல்வி அமைச்சருடன் கோயி லுக்கு வந்திருந்த மனிதவள, உள் துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ, ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தொண்டூழி யர்கள் தங்களது நேரத்தை இதற்காக ஒதுக்கி சேவையாற்றுவது அவர்களது கடப்பாட்டினை பிரதிபலிக்கிறது என்றார்.

இந்தியப் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பிள்ளைகளுக்கு உணர்த்தும் வகையில் பெற்றோர் தங்களது பிள்ளைகளையும் கோயி லுக்கு அழைத்து வந்து சமூகத்துடன் தொடர்புபடுத்திகொள்ள எடுத்துக் கொண்ட முயற்சியை அமைச்சர் ஜோசஃபின் டியோ பாராட்டினார். சிங்கப்பூரர்கள் உட்பட வெளி நாட்டு ஊழியர்களும் இவ்விழாக் களில் கலந்துகொள்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்வாறு அனைவரும் ஒன்றுகூடும் வாய்ப்பு களை உருவாக்கும்போது ஒரு சமூகமாக செழிக்க அது உதவுகிறது என்று வலியுறுத்தினார். கிட்டத்தட்ட 22,000 பேருக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை, மதிய, இரவு உணவு வழங்க ஒவ் வொரு வெள்ளிக்கிழமையும் மாலை யிலிருந்தே தொண்டூழியர்கள் அதற் காக தயார்செய்யத் தொடங்கி விடு கின்றனர் என ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் நிர்வாகக் குழுவின் தலைவர் திரு எஸ்.சதீஷ் அப்பு தெரிவித்தார்.

காய்கறி நறுக்குவது, சமைப்பது, சமையல் அறையிலிருந்து சமைத்த உணவு வகைகளைப் பரிமாறும் கூடத்திற்கு பாதுகாப்பான முறையில் எடுத்துச்செல்வது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது, உணவு பரி மாறுவது, கோயிலை தூய்மைப் படுத்துவது, மருத்துவ உதவி என கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் பங்கு இதில் அடங்கியுள்ளது.