You are here

‘சாஸ்’ திட்டத்திலிருந்து பத்து மருந்தகங்கள் இடைநீக்கம்

சமூக சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) பங்கேற்றிருந்த பத்து ஆக்செஸ் மருந்தகங்களை சுகாதார அமைச்சு அத்திட்டத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த இடைநீக்கம் இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்த மருந்தகங்கள் அனைத்தும் ஆக்செஸ் மருத்துவக் குழுமத்தின்கீழ் செயல்படுபவை. கடுமையான விதி மீறலுக்கு உள்ளான பல்வேறு சாஸ் கோரிக்கைகளை அந்த மருந்தகங்கள் முன்வைத்திருந்தன. அதாவது, நோயாளிகள் வருகை அல்லது நீண்டகால சிகிச்சை குறித்து அந்த மருந்தகங்கள் தாக்கல் செய்து இருந்த விண்ணப்பங்களுடன் போதிய ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை.

அந்த மருந்தகங்கள் தாக்கல் செய்த தணிக்கை விவரங்களில் இந்தக் கடுமையான விதிமீறல்கள் கண்டறியப் பட்டதாக அமைச்சு தெரிவித்தது. இந்தச் சம்பவம் குறித்து போலிசிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இதில் சம்பந் தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திடம் பரிந்துரைக்கப்படும் என் றும் அமைச்சு கூறியது. “சாஸ் கோரிக்கைகளைத் தாக்கல் செய்வதில் இடம்பெறும் விதிமீறல் களைச் சுகாதார அமைச்சு கடுமை யானதாகக் கருதுகிறது,” என்று அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.

சமூக சுகாதார உதவித் திட்டத்திலிருந்து (சாஸ்) தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள பத்து ஆக்செஸ் மருந்தகங்களில் ஒன்றான இது, எண் 59 நியூ அப்பர் சாங்கி ரோட்டில் அமைந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்