You are here

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்பு

மான்ட்ரியால்: கனடாவின் ஆகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று வெடிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தீ வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. எர்விங் எண்ணெய் சுத்தி கரிப்பு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடிப்பை மிகவும் மோசமான விபத்து என்று அதன் உரிமை யாளர் வர்ணித்துள்ளார். டீசல் எரிவாயு பிரிவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாக ஆலையை நடத்தும் நிறுவனம் தெரிவித் துள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது ஆலையில் வேலை செய்துகொண் டிருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட தாகக் கூறப்படுகிறது. நான்கு ஊழியர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாக வும் அவர்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொழுந்துவிட்டு எரிந்த கனடாவின் ஆகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. படம்: ராய்ட்டர்ஸ்