You are here

இருப்பதா போவதா: குழப்பத்தில் செல்சி ஆட்டக்காரர்

லண்டன்: செல்சி காற்பந்துக் குழுவிலேயே நீடிப்பதா, இல்லை தமது கனவு அணியான ரியால் மட்ரிட்டுக்கு மாறுவதா என முடிவு எடுக்க முடியாமல் தவிப்பதாகக் கூறியுள்ளார் பெல்ஜிய அணித் தலைவர் ஈடன் ஹசார்ட், 27 (படம்). செல்சி குழுவுடன் ஹசார்ட் 2020ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். ஆயினும் இப்பருவத்தின் தொடக்கத்தில் அவர் சாம்பியன்ஸ் லீக் வெற்றி யாளரான ரியால் மட்ரிட்டுடன் இணையலாம் எனப் பேசப்பட்டது. “செல்சியுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க இருக்கிறேன் என்றோ, இல்லை அக்குழுவைவிட்டு வெளி யேறுகிறேன் என்றோ என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. எனக்கு எது நல்லதோ அதைச் செய்ய விரும்புகிறேன். அதே நேரத் தில் நான் இன்றிருக்கும் நிலையை எட்ட செல்சி குழுவே காரணம். அதனால் நான் எடுக்கும் முடிவால் செல்சிக்கும் நன்மை விளைய வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்றார் ஹசார்ட்.

அதனால் பொறுத்திருந்துதான் முடிவெடுக்க வேண்டும் என்ற இவர், “சில நாட்கள் காலையில் எழும்போது ரியால் மட்ரிட்டுக்குப் போகவேண்டும் எனத் தோன்று கிறது. சில வேளைகளில் செல்சி யிலேயே நீடிக்கலாம் எனத் தோன்றுகிறது. எனது எதிர்காலம் பற்றியது என்பதால் முடிவெடுப்பது மிகச் சிரமமாக இருக்கிறது,” என்றும் சொன்னார். கடந்த வார இறுதியில் சௌத் ஹேம்டன் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் செல்சி 3=0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த ஆட்டத்தில் செல்சியின் முதல் கோலை அடித்த ஹசார்ட், இந்தப் பருவத்தில் இப்போதே ஏழு கோல்களை அடித்துவிட்டார். இது வரை எட்டு ஆட்டங்கள் முடிந்து இருக்கும் நிலையில், தோல்வியே காணாத குழுவாக செல்சி திகழ் வதற்கு ஹசார்டின் அற்புதமான செயல்பாடும் ஒரு காரணம். காற்பந்திலிருந்து தான் ஓய்வு பெறுவதற்குமுன் இன்னொரு பெரிய குழுவிற்கு மாற பெரிதும் வாய்ப்புள்ளதாகக் கூறும் இவர், ரியால் மட்ரிட்டையே உலகின் ஆகச் சிறந்த காற்பந்துக் குழு வாகக் கருதுகிறார்.