You are here

இந்தோனீசியா: உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணி தீவிரம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவேசியில் நிகழ்ந்த நிலநடுக் கத்திலும் அதையடுத்து ஏற்பட்ட சுனாமியிலும் 380க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியிருக்கலாம் அல்லது உயி ரோடு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாலு அலோன் நகரில் மட்டும் 384க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். சுனாமியால் மிக மோச மாகப் பாதிக்கப்பட்ட இரு நகரங் களில் இதுவும் ஒன்று என்று இந்தோனீசிய தேசிய பேரிடர் முகவையின் பேச்சாளர் ஒருவர் சொன்னார். இந்தச் சூழ்நிலையில் சுமார் 300,000 பேர் வசிக்கும் டோங்கலா நகரை அடைய மீட்புப் பணி ஊழியர்கள் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நகரத்தின் முக்கிய பாலம் இடிந்துவிட்டதால் அது தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு முன் 48ஆக மட்டுமே இருந்த இறந்தவர் களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால் அதிகாரி கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். “உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இருந்தாலும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும்,” என்று அந்தப் பேச்சாளர் குறிப் பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 7.5 ரிக்டர் அளவு சுனாமி தாக்கியதால் பத்து அடி உயரத் திற்கு சுனாமி அலைகள் எழுந்தன. காணொளி காட்சிகளில் ராட்சச அலைகள் கட்டடங்களை அடித்துச் செல்வதையும் பலர் உயிருக்குப் பயந்து ஓடுவதையும் காண முடி கிறது. சுனாமி தாக்கியபோது கடற் கரையில் நடந்த விழாவில் நூற்றுக் கணக்கானவர்கள் பங்கேற்றனர் என்று கூறிய பேச்சாளர் அவர் களின் நிலை இன்னமும் தெரிய வில்லை என்றார்.