You are here

இரண்டாவது மாதமாக குறைந்தது தனியார் வீட்டு விலை

சொத்துச் சந்தையைத் தணிப் பதற்கான நடவடிக்கைகள் ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து, கொண்டோமினிய வீட்டு விலை தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைந் தது. எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை இணையத்தளம், இது குறித்த முன்னோட்ட கணிப்புகளை நேற்று வெளியிட்டது. கொண்டோமினிய, தனியார் வீடுகளுக்கான மறுவிற்பனை விலை ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்புநோக்க செப்டம்பர் மாதத்தில் 0.2% குறைந்தது. ஜூலையுடன் ஒப்புநோக்க ஆகஸ்ட் மாதத்திற்கான வீட்டு விலை 0.3% குறைந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர், இந்த விலை 12 மாதங்களுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

ஆயினும், ஜூலையில் அறிமுகமாக புதிய கட்டுப்பாடுகளுக்குப் பிடன இந்த விகிதம் குறையத் தொடங்கியது. செப்டம்பரில் கிட்டத்தட்ட சுமார் 702 தனியார் அடுக்குமாடி வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன. இது, ஆகஸ்டில் மறுவிற்பனை செய்யப்பட்ட 7-07 வீடுகளுடன் ஒப்புநோக்க 0.7% குறைவு. வீட்டு விலைகளின் குறைவுக்கு புதிய கட்டுப்பாடுகள் முக்கிய காரணம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.