You are here

கீர்த்தி சிரிப்பால் ஸ்ரீரெட்டி எரிச்சல்

ஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசி யதைக் கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாகக் கூறப் படுகிறது. இதனால் எரிச்சல் அடைந்துள்ளார் ஸ்ரீரெட்டி. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளைப் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக இயக் குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர் கள் மீது பாலியல் புகார் கூறி அவர்களது பெயர் பட்டியலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத் தியவர் ஸ்ரீரெட்டி. ‘சண்டக்கோழி–2’ படவிழாவில் நடிகை கீர்த்தி சுரேசுடன் கலந்து கொண்ட விஷாலிடம் செய்தியாளர் கள் கேள்வி எழுப்பியபோது, “ஸ்ரீரெட்டிக்கு தமிழ்ப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததை வர வேற்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கும்போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள். அவர் தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் புகைப்படக் கருவி வைத்திருப்பார்,” என்றார்.

இதைக் கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாகக் கூறப் படுகிறது. இந்தச் சிரிப்பு ஸ்ரீரெட்டி யைக் கோபப்படுத்தி உள்ளது. கீர்த்தி சுரேசை தனது ஃபேஸ் புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கண்டித் துள்ளார். “கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப் படாதீர்கள் அம்மா. நீங்கள் எப் போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒருநாள் போராடுபவர் களின் வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்கமாட்டேன். நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண் டிருக்கிறீர்கள்,” என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.