You are here

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவுக்குக் காரணம்: முன்னாள் தலைவர் வெளிப்படை

ஜமைக்கா: கிரிக்கெட் விளையாட்டில் ஒரு காலத்தில் உலகின் முதல்நிலை அணியாகத் திகழ்ந்து வந்த வெஸ்ட் இண்டீஸ், இப்போது டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்கப் பெரிதும் தடுமாறி வருகிறது. இதற்கு, இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் வகையில் அணியில் ஒருவரும் இல்லா ததே காரணம் என அவ்வணியின் முன்னாள் தலைவரும் தொடக்கப் பந்தடிப்பாளருமான டேரன் கங்கா (படம்) தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, அந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்ட வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது.

டெஸ்ட் போட்டி வர லாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆக மோசமான இரண்டாவது தோல்வி இதுதான். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி நாளுக்கு நாள் சரிந்து வருவது குறித்து ஆதங் கப்பட்டார் கங்கா. “தென்னாப்பிரிக்க அணிக்கு 1998ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி களில் நான் அறிமுகமானபோது அம்புரோஸ், வால்ஸ், லாரா, ஹூப்பர் என எதிரணிகளை மிரளச் செய்யும் ஆட்டக்காரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தனர். இப்போதைக்கு இளம் ஆட்டக் காரர்கள் யாரும் வியந்து பார்த்து, அவர்களைப் போல நாமும் சிறப்பாக விளையாடவேண்டும் என எண்ணும் வகையில் ஒருவர் கூட அணியில் இல்லை.