மொரின்யோ: எட்ட முடியாத தூரத்தில் உள்ளது யுவென்டஸ்

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற் பந்துப் போட்டியில் தனக்கு எதி ராக யுவென்டஸ் குழு அடைந்த வெற்றிக்குப் பிறகு பேசிய மொரின்யோ, அக்குழுவை எட்ட முடியாத தூரத்தில் மேன்யூ உள் ளது என்றார். நட்சத்திர வீரர் ரொனால்டோ வின் உதவியுடன் டைபாலா போட்ட 17வது நிமிட கோலால் வெற்றி யுவென்டஸ் வசமானது. இதனால் மான்செஸ்டர் யுனை டெட் 1-0 என்ற கோல் கணக்கில் மண்ணைக் கவ்வியது. ஆட்டத்திற்குப் பிறகு பேசிய மொரின்யோ, "மான்செஸ்டர் சிட்டி, யுவென்டஸ், ரியால் மட்ரிட், பார்சிலோனா ஆகிய குழுக்களை எட்ட முடியாத தூரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் உள்ளது. யுவென்டசின் மத்திய திடல் வீரர்களின் ஆட்டத்தைப் பாராட்டிய மொரின்யோ, "உலகின் மிகச் சிறந்த வீரர்களை அணி நிர்வாகம் வாங்கவில்லை என்றால் நம்மால் அவர்களோடு போட்டி போட முடி யாது," என்று எச்சரிக்கும் வகை யில் பேசினார்.

மேன்யூவை முன்னேற்ற பாதை யில் கொண்டு செல்ல அது ஒன்று தான் வழியா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், "சிறந்த விளை யாட்டாளர்கள் அனைவரும் மேற் குறிப்பிட்ட குழுக்களில்தான் அதி கம் உள்ளனர். எனவே, அது அவ்வளவு எளிதானதல்ல. "நம்மிடம் உள்ளவர்களைக்கொண்டு அணியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்," என்றார். கடந்த 2016ல் மேன்யூவின் நிர் வாகியாகப் பொறுப்பேற்ற பிறகு அவர் சுமார் 400 மில்லியன் பவுண்டுக்கு விளையாட்டாளர்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்னோர் ஆட்டத்தில், ஷக்தார் டோனட்ஸ்க் குழுவை 3-1 என வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி 'எஃப்' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. டாவிட் சில்வா, பெர்னார்ட் சில்வா, லபோர்ட்டே ஆகியோரின் கோலால் சிட்டி பெற்ற வெற்றி குறித்து பேசிய கார்டியோலா, தான் பொறுப்பேற்றப் பிறகு சிட்டி குழு வெளிப்படுத்திய மிகச்சிறந்த ஆட்டம் இது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 'ஜி' பிரிவு ஆட்டத்தில் விக் டோரியா குழுவிற்கு எதிராக ரியால் மட்ரிட் 2-1 என வெற்றி பெற்றாலும் அவர்களின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாத தால் அதன் நிர்வாகி ஜுலன் பதவி இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!