சமநிலையில முடிந்த ஆட்டம்; கோஹ்லி அடித்த சதம் விரயமானது

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீசுக்கும் இடையி லான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி அடித்த சதத்திற்குப் பலன் இல்லாமல் போனது. பூவா தலையாவில் வென்ற இந்தியா முதலில் பந்தடித்தது. அணித் தலைவர் விராத் கோஹ்லி (157), அம்பதி ராயுடு (73) ஆகியோரின் சிறப்பான ஆட்டத் தால் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 322 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. கைரன் பொவேல், சந்தரபால் ஹேம்ராஜ் ஆகியோர் தொடக்க வீரர்களாக ஆட்டத்தைத் தொடங் கினார்கள்.

பொவேல் 18 ஓட்டங்களிலும் ஹெம்ராஜ் 32 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்கெட் காப்பாளர் ஷே ஹோப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அனுபவ வீரர் சாமுவேல்ஸ் 13 ஓட்டங்களில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் 12 ஓவர் களில் 3 விக்கெட்டுகள் இழப் பிற்கு 78 ஓட்டங்கள் இருந்த நிலையில், நான்காவது விக் கெட்டுக்கு ஹோப்புடன் ‌ஷிம்ரன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. ஹெட்மையர் பந்துகளை பறக்கவிட்டார்.

சிக்சர்கள் தொடர்ந்து பதிவாகி யதால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ஹெட்மையர் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 64 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் இந்த ஓட்டத்தை எடுத்தார். அடுத்து வந்த ரோவ்மன் பொவெல் 18 பந்துகளில் 18 ஓட்டங்கள் சேர்த்தார். ஷே ஹோப்-ஹெட்மையர் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் குவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!