சாலா கோல் வேட்டையில் திணறிய பெல்கிரேட் குழு

லிவர்பூல்: நேற்று அதிகாலை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 'சி' பிரிவு ஆட்டமொன்றில் லிவர்பூலை எதிர்கொண்ட ரெட்ஸ்டார் பெல்கிரேட் குழு, சாலா அடித்த இரண்டு கோல்களால் திணறியது. சொந்த மைதானத்தில் விளை யாடிய லிவர்பூல், தொடக்கத்தி லிருந்தே ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆட்டத்தின் 20ஆம் நிமிடத்தில் ராபர்ட்சன் தந்த பந்தை கோல் வலைக்குள் லிவர்பூலின் ஃபிர்மினோ சேர்த் தார்.

எனினும், அதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடியும் தறு வாயிலும் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின் மூலமும் இரண்டு கோல்கள் போட்ட சாலா ரெட்ஸ்டார் பெல்கிரேட் குழு மீண்டு வரமுடியாத நிலையை உரு வாக்கினார். பின்னர், பெனால்டி வாய்ப்பு ஒன்றை வீணடித்த சாடியோ மானே ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் தமது பங்குக்கு ஒரு கோல் போட, லிவர்பூல் அணி 4-0 என வெற்றி பெற உதவினார்.

லிவர்பூல் போட்ட கோல்கள் ஒருபக்கம் இருக்க, லிவர்பூல் அணிக்கு ஸெர்டான் ஷக்கிரி பேருதவியாக இருந்தார் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. லிவர்பூலுக்கு ஃபிர்மினோ முதல் கோல் போடுவதற்கு ராபர்ட்சன் காரணமாக இருந்தார் என்றாலும் லிவர்பூல் இரண்டாவது கோலை போடுவதற்கு பந்தை ஷக்கிரி அவர் பாதையில் லாவகமாக திருப்பிவிட்டதுதான் காரணம் என்று பிபிசி தகவல் தெரிவிக் கிறது.

நேற்றைய ஆட்டத்தில் லிவர்பூ லின் சானேயும் துடிப்பாக விளை யாடினார். யர்கன் கிளோப்பின் லிவர்பூல் அணி அண்மைய காலங்களில் சிறப்பாக விளையாடியதாக சொல்ல முடியாது. சென்ற வாரம் ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவை 1=0 என்ற கோல் எண்ணிக்கையில் மட்டுமே அந்த அணியால் வெற்றி பெற முடிந்தது. அதற்கு முன்னதாக, அது மான்செஸ்டர் சிட்டி, செல்சி ஆகிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்களுடனான ஆட்டத்தில் சமநிலை கண்டதுடன் இத்தாலி யின் நேப்போலி குழுவிடம் தோல்வி கண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!