லிவர்பூலின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்து வரும் ஃபேபினோ

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் லிவர்பூல் குழுவின் நம்பிக்கை நட்சத்திரங் களில் ஒருவராக ஒளிவீசத் தொடங்கியுள்ளார் ஃபேபினோ. இந்தப் பருவ இபிஎல்லில் இது வரை ஆடிய 9 போட்டிகளில் 7 வெற்றி, 2 சமநிலை என லிவர் பூலின் தோல்வியில்லாப் பயணம் குறைந்த கோல் வித்தியாசத்தில் தான் இருந்துவந்தது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பெல்கிரேட் குழுவை நான்கு கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது லிவர்பூல். இந்த ஆட்டத்தில் ஃபேபினோ கோல் எதுவும் போடவில்லை என் றாலும் அவர் விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இப்போட்டியில் முழுநேர ஆட் டக்காரராக அவர் விளையாடிய விதம், பிரிமியர் லீக் பட்டம் வெல் லும் கிளோப்பின் முயற்சிக்கு மேலும் நம்பிக்கை அளிக்கும் வித மாக இருந்தது.

குறிப்பாக மத்திய திடல் பகுதி யில் ஃபேபினோவின் அபார திற மையை வெளிப்படுத்துவதாக அமைந்தது பெல்கிரேட் குழுவிற்கு எதிரான ஆட்டம். எனவே, இன்று இரவு நடைபெற உள்ள கார்டிஃப் குழுவிற்கு எதி ரான இபிஎல் ஆட்டத்தில் முதன் முறையாக ஃபேபினோ தொடக்கத் திலேயே களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, ஜோர்டன் ஹெண் டர்சன், கெய்ட்டா இருவரும் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படும் நிலை யில் ஃபேபினோ களமிறக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆனால் ஃபேபினோவை எந்த இடத்தில் விளையாட வைப்பது என முடிவெடுப்பதில் கிளோப் சிரமப்படலாம். ஏனெனில், மத்திய திடல் பகுதியில் வாஇனால்டம், ஜேம்ஸ் மில்னர், ஸெர்டன் ஷக்கிரி ஆகி யோர் முத்திரை பதித்து வரும் நிலையில், ஃபேபினோவை எப்படி பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வது கிளோப்பிற்கு கடினமாக இருக்கும். முன்னாள் மொனாக்கோ ஆட் டக்காரரான ஃபேபினோ 39.9 மில்லியன் பவுண்டுக்கு இந்தப் பருவத்தில் லிவர்பூலுடன் இணைந் தார். அதுமுதல் மூன்று சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் இபிஎல் போட்டியில் ஒரேயொரு முறை மட்டுமே அவர் களமிறக்கப்பட்டார். அதுவும் 21 நிமிடங்கள் மட்டுமே விளையாடிய மாற்று ஆட்டக்காரராகத்தான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!