மெஸ்ஸி இல்லா பார்சிலோனாவை வெற்றிகொள்ளத் துடிக்கும் ரியால்

பார்சிலோனா: ஸ்பானிய லா லீகா காற்பந்துப் போட்டியில் முன்னணி குழுக்களான பார்சிலோனாவும் ரியால் மட்ரிட் குழுவும் நாளை மோத உள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு இக்குழுக்கள் மோதும் ஆட்டத்தில் முதன்முறையாக பார்சிலோனாவின் குழுத் தலை வரும் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி காயம் காரணமாக விளையாட மாட்டார். ரியால் மட்ரிட் முன்னாள் வீரரும் போர்ச்சுகல் அனித் தலைவருமான ரொனால்டோ யுவென்டஸ் குழுவிற்குச் சென்று விட்டார். 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு இவர்கள் இருவரும் இல்லாமல் ரியால்=பார்சிலோனா குழுக்கள் மோதுவது இதுவே முதன்முறை.

இந்நிலையில், பார்சிலோனா நிர்வாகி வல்வர்டே மெஸ்ஸிக்கு மாற்றாக யாரைக் களம் இறக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. செவிய்யா குழுவிற்கு எதி ரான ஆட்டத்தின்போது மெஸ்ஸி காயமடைந்து வெளியேறிய நிலையில் அவரது இடத்தை நிரப்பிய உஸ்மான் டெம்பெலே விற்கு வாய்ப்புக் கிட்டலாம். அந்த ஆட்டத்தில் முக்கிய மான நேரத்தில் நான்கு முறை அவர் பந்தைக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இன்டர் குழு விற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட ரஃபினாவைக் களமிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படு கிறது. எப்படியிருந்தாலும் மெஸ்ஸி இல்லாத பார்சிலோனாவை வெற்றிகொள்ளும் முனைப்புடன் ரியால் களமிறங்கவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!