ஒரே மாதிரி அணுகுமுறை: வெற்றியிலும் செல்சி நிர்வாகிக்குச் சிக்கல்

லண்டன்: குறிப்பிட்ட சூழ்நிலையை எதிர்கொள்வதில் செல்சி காற் பந்துக் குழு ஆட்டக்காரர்கள் சிலர் ஒரே மாதிரியான அணுகு முறையைக் கையாளுவதால் வீரர் களைத் தேர்வு செய்வது கடினமாக உள்ளதாகக் கூறியுள்ளார் அதன் நிர்வாகி மௌரிசியோ சாரி. யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டமொன்றில் ரூபன் லாஃப்டஸ் சீக் ஹாட்ரிக் கோல் அடிக்க, செல்சி 3=1 என்ற கனக்கில் பேட் பாரிசவ் குழுவை வெற்றிகொண்டது.

ஆட்டத்தின் இரண்டாம் நிமி டத்தில் டாவிடே ஸப்பகோஸ்டா அனுப்பிய பந்தை கோலாக்கிய லாஃப்டஸ் சீக், 8வது, 53வது நிமிடங்களில் மேலும் இரு கோல் களைப் போட்டு அசத்தினார். ஒலிவியர் ஜிரூ, ஸப்பகோஸ்டா ஆகியோர் கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை கோல் காப்பாளர் தடுத்ததன் மூலம் மோசமான தோல்வியில் இருந்து பாரிசவ் தப்பியது. கடைசியில் ஒரேயொரு கோல் போட்டு அக்குழு ஆறுதல் அடைந்தது. ஹாட்ரிக் நாயகன் லாஃப்டஸ் சீக் இப்பருவத்தில் செல்சிக்காக இதுவரை இரண்டு ஆட்டங்கள் மட்டுமே விளையாடியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!