வெற்றிப் பாதைக்குத் திரும்ப இந்தியா முனைப்பு

புனே: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது போட்டியில் தோல் வியைத் தவிர்த்துச் சமநிலை கண்டது. பந்தடிப்பில் வலுவாக உள்ள இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். முதல் இரண்டு போட்டியிலும் சதம் அடித்த விராத் கோஹ்லி, இன்றையப் போட்டியிலும் அபார மாக விளையாடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளதால் பந்துவீச்சு பலமடைந்துள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமை யிலான வெஸ்ட் இண்டீஸ் அணி யில் ஹெட்மையர், ஷே ஹோப் ஆகியோர் பந்தடிப்பில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சிற்கு ஹோல்டர், கீமார் ரோச் ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே இந்திய அணித் தேர்வில் கேதார் ஜாதவ் தேர்வு செய்யப்படாதது குறித்து விளக்க மளித்துள்ளார் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத். "கேதார் ஜாதவைத் தேர்வு செய்யாததற்கு அவரது உடற் தகுதிதான் காரணம்.

"இதற்கு முன்னரும்கூடக் கேதார் ஜாதவ் உடற்தகுதியுடன் அணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால் வந்தவுடன் மீண்டும் காயமடைந்து வெளியேறுவார். இதற்கு கடந்த ஆசியக் கிண்ணப் போட்டி ஒரு உதாரணம். "மேலும் ஜாதவ் இந்திய 'ஏ' அணிக்காக இன்னொரு போட் டியில் ஆடியிருந்தால், 4வது ஒருநாள் போட்டிக்கு அவரைச் சேர்க்கலாம் என்றுதான் இருந் தோம். "அணியைத் தேர்வு செய்யும் போது நாங்கள் சில நடைமுறை களைக் கடைப்பிடித்தாக வேண் டும் என்பதை வீரர்கள் புரிந்து கொண்டால் நல்லது," என்று தெளிவுபடுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!