You are here

மனச்சோர்வுக்குத் தீர்வுகாண விழிப்புணர்வு

மனச்சோர்வு தொடர்பான மெய் நிகர் (விஆர்) அனுபவத் திட் டத்தை ‘டச்’ சமூகச் சேவை அமைப்பு நேற்று தொடங்கி வைத் தது. மனச்சோர்வுடைய இளையர் களின் நிலையிலிருந்து அவர்கள் அனுபவிக்கும் நோய்க்கான அறி குறிகளைப் பொதுமக்கள் மெய் நிகர் கருவிகளை அணிந்து கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஹார்பர்ஃப்ரண்ட் எம்ஆர்டி நிலையத்தில் தொடங்கி வைக்கப் பட்ட இத்திட்டத்தின்கீழ் பள்ளி களும் இணையவிருக்கின்றன.

அத்துடன் ‘டச்’ அமைப்பு மனநலம் என்ற கருப்பொருளில் அமைந்த முதல் எம்ஆர்டி ரயில் வண்டியையும் தொடக்கி வைத் தது. மனச்சோர்வு, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ளு தல், பதற்றம், முறையற்ற உணவுப்பழக்கங்கள் என்ற நான்கு முக்கிய பிரச்சினை களைப் பற்றிய தகவல்கள் ரயில்வண்டியில் இடம்பெறும். இப்பிரச்சினைகள் உள்ளோர் அவற்றை எவ்வாறு சமாளிக் கலாம் என்ற உத்திகளும் இடம்பெறும்.

அத்துடன் மனச்சோர்வு தொடர்பான பிரச்சினைகளி லிருந்து மீண்டு வந்தோரின் வாழ்க்கைச் சம்பவங்களும் சிறு கதை வடிவில் ரயில்வண்டியில் அமைந்திருக்கும். பொதுமக்களுக்குத் தகவல் அளித்து விழிப்புணர்வை ஏற் படுத்த இக்கருப்பொருள் அடிப் படையிலான எம்ஆர்டி ரயில் வண்டி பெரிதும் பங்காற்றும்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டார் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் மேயர் திரு டெஸ்மண்ட் சூ. நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் மனச் சோர்வு கருப்பொருளில் அமைந்த எம்ஆர்டி ரயில்வண்டியில் விருந் தினர்களுடன் ஒரு பயணியாக டோபி காட் நிலையம் வரை பயணமும் செய்தார்.

மனச்சோர்வால் பாதிக்கப்படும் இளையர்கள் அனுபவிப்பதை மெய்நிகர் உண்மை கருவிமூலம் அறிந்துகொள்ளும் பொதுமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்