You are here

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி அறைக்கு வந்த சந்தேகத்துக்கு உரிய கடிதம்

தோ பாயோவில் உள்ள ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி அறைக்குச் சந்தேகத்திற்குரிய ஒரு கடிதம் வந்ததையடுத்து போலிசும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் அந்த அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டன. வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தை வாங்கிய மூன்று ஊழியர்கள் தங்களுக்கு மயக்கம் வந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அது பற்றி பாதுகாவல் அதிகாரிகள் போலிசிடம் தெரிவித்தனர். அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படை அந்தப் பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைத்து, சந்தேகத் திற்குரிய அந்தக் கடிதத்தை ஒரு கொள்கலனில் அடைத் தது.

கடித உறையில் பல்வேறு ரசாயன சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, ஆபத்தை விளைவிக்கும் பொருள் அதில தென்படவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. கடிதத்தைப் பிரித்த அந்த மூன்று ஊழியர்களின் உடல்நிலையை குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரிகள் பரிசோதித்து, அவர்கள் நலமாக உள்ளனர் என தெரிவித்தனர். முன்னெச்சரிக்கையாக அந்த மூவரை யும் குளிக்கச் சொல்லி உடைகளை மாற்றிக்கொள்ளுமாறும் குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியது.

தோ பாயோவில் இருக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி அறையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய கடிதத்தைச் சோதிக்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்