You are here

நாட்பட்ட நோயாளிகள் பலன்பெற புது திட்டம்

ஈசூன் பலதுறை மருந்தகத்தில் நடப்புக்கு வந்துள்ள புதிய திட்டம் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்குக் கட் டணக் கழிவுகளை வழங்கு கிறது. அத்துடன் ‘நாட்பட்ட நோய் பராமரிப்புத் திட்டம்’ அவர்களுக்கு நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. புதுப்பொலி வூட்டப்பட்ட ஈசூன் பலதுறை மருந்தகத்தின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியின் தொடர்பில் ‘தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழும பலதுறை மருந்தகங்கள்’ அமைப்பு நேற்று திட்டத்தை விவரித்தது.

நாட்பட்ட நோய்களால் பாதிக் கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோ சனை, பரிசோதனை, மருந்து போன்ற சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கு ஓர் ஆண்டு முழுமைக்குமான கட்டணத்தை முன்கூட்டி செலுத்த வேண்டும். அவர்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து தொகை $100க்கும் $500க்கும் இடைப் பட்டு இருக்கும். சுகாதாரப் பராமரிப்புக் குழு நிர்ணயிக்கும் இலக்குகளை எட்டும்போது அந்த நோயாளி களுக்கு $5 முதல் $20 வரை யிலான கட்டணக் கழிவுகள் வழங்கப்படும். அந்தக் கட் டணக் கழிவுகளை அடுத்து வரும் ஆண்டுக்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.