You are here

குளோப்: ஆர்சனலை எளிதில் விட்டுவிட்டோம்

லண்டன்: நேற்று அதிகாலை தனது சொந்த மைதானமான எமிரேட்சில் லிவர்பூலை எதிர் கொண்ட ஆர்சனல் குழு ஆட்டத் தின் 82ஆம் நிமிடத்தில் அலெக் சாண்டர் லக்காசெட் அடித்த கோலால் ஆட்டத்தை 1-1 என சமநிலை கண்டது. முன்னதாக, ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் ஜேம்ஸ் மில்னர் அடித்த பந்தால் லிவர்பூல் அணி கோல் போட்டு முன்னிலை வகித்தது.

அந்த சமயம் லிவர்பூல் ஆடிய விதம் அந்த அணி வெற்றிப் பாதையில் செல்கிறது என்ற தோற்றத்தை -ஏற்படுத்தியது. ஆனால், ஆர்சனலின் தாக்கு தல் ஆட்டக்காரரான அலெக்சாண் டர் லக்காசெட் லிவர்பூல் தற்காப்பு அரணை ஊடுருவிப் பார்ப்பதைக் கைவிடவில்லை. அவரது முயற்சியும் வீண்போக வில்லை. ஆட்டம் முடிய கிட்டத் தட்ட பத்து நிமிடங்கள் இருக்கும் வேளையில், லிவர்பூல் கோல் காப்பாளரிடமிருந்து பந்தை தட்டிப் பறித்து அவரைச் சுற்றியிருந்த மற்ற தற்காப்பு வீரர்களையும் தாண்டி கோல் கம்பத்தின் ஓரமாகப் பந்தை அடித்து கோல் போட்டார். ஆட்டத்தின் முடிவு குறித்து பேசிய லிவர்பூல் நிர்வாகி யகர்ன் குளோப், “ஆர்சனலுக்கு நாங்கள் எளிதில் விட்டுக்கொடுத்துவிட் டோம்,” என்று நொந்துகொண் டார்.

இந்த ஆட்டத்தின் முடிவு தர வரிசையில் லிவர்பூலின் முதல் நிலையைப் பாதிக்கப்போவதில்லை என்றாலும் ஆட்டத்தின் முதல் பாதியில் சாடியோ மானே அடித்த கோல் ‘ஆஃப்சைட்’ என நிரா கரிக்கப்பட்டது அந்தக் குழுவை ஏமாற்றமடைய வைத்துள்ளது. “அது கோல் என்றே நினைக் கிறேன், கோலாக இருந்திருக்க வேண்டும். சாடியோ மானே தான் ஆஃப் சைட் நிலையில் இல்லை என்று நினைத்துதான் பந்தை நோக்கி ஓடினார். அதன் பின்னர் நடுவர் விசிலடித்து ஆஃப்சைட் என அந்த கோலை நிராகரித்து விட்டார்,” என்றார்.

ஆர்சனலின் தாக்குதல் ஆட்டக்காரர் அலெக் சாண்டர் லக்காசெட் தமது வெற்றி கோலை அடிப்பதற்கு முன் இப்படியொரு கோலைப் போட்டார். இருப்பினும் ஆப்ஃசைட் என்று அந்த கோல் மறுக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்