பல தலைமுறையினர் கூடும் பண்டிகை

எஸ்.வெங்கடேஷ்வரன்

பல தலைமுறையினர் வாழும் பல் லின சிங்கப்பூர் சமுதாயத்தைப் பறைசாற்றும் வண்ணமாக அமைந் துள்ளனர் திருவாட்டி ரா.ராஜல ட்சுமி குடும்பத்தினர். குடும்பத்தில் ஆக மூத்தவரான 90 வயது பாட்டி திருவாட்டி ராஜ லட்சுமி முதல், புதுவரவான ஆறு மாத கைக்குழந்தை நிக்கோ இமானுவல் தீபன் வரை, தீபா வளியை நான்கு தலைமுறை யினரை உள்ளடக்கிய குடும்பமாக இந்த ஆண்டு கோலாகலமாகக் கொண்டா டுகிறார்கள். திருவாட்டி ராஜலட்சுமிக்கு ஐந்து பிள்ளைகள், 11 பேரப் பிள்ளைகள், நான்கு கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் ரா.ராமச்சந்திரனும் அவரது மனைவி ஏமி செங்கும் பிரபல ஆங்கில தொலைக்காட்சி நட்சத்திரங்களாக உள்ளனர்.

அவர்கள் இருவரும் ‘ஆக்ட் 3’ (Act 3) எனும் சிறுவர் நாடக நிறுவனத்தை நிர்வகித்து வரு கின்றனர். இந்த நிறுவனத்தில் சிறார்களுக்கு நடிப்பு மட்டுமல்லாது, நாடகம் மூலம் கணிதம், அறி வியல், வரலாறு போன்ற பள்ளிப்பா டங்களைக் கற்றுக்கொடுக்கவும் நாடகக் கலையைப் பயன்படுத்து கிறார் திரு ராமச்சந்திரன். கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பு தேவையுடைய சிறார் களுக்கும் சிறப்பு நடிப்பு பயிற்சிக ளை ராமச்சந்திரன், ஏமி தம்ப தியர் கற்றுத் தருகின்றனர். இவர்கள் இருவரும் 13 ஆண்டு களுக்கு முன் 2005ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி, ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் மணமுடித்தனர்.

திருவாட்டி ரா.ராஜலட்சுமி, 90, (பின்வரிசையில் இடமிருந்து ஐந்தாவது) தமது மகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் இவ்வாண்டு தீபாவளியை சேர்ந்து கொண்டாடுவதைப் பெரும் மகிழ்ச்சியாகக் கருதுகிறார். படம்: திமத்தி டேவிட்