முதியோருக்கும் கொண்டாட்டம்

எஸ்.வெங்கடேஷ்வரன்

‘சன்லவ்’ முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் தங்கள் இல்லத்தைவிட்டு வெளியே சுற் றுலா செல்வது அரிதுதான். அவ்வாறு அவர்கள் வெளியே சென்று இன்பமாக நேரத்தைச் செலவிட உதவி புரிந்தது இவ் வாண்டின் தீபாவளி. கடந்த வியாழக்கிழமையன்று, லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் அமைந்திருக்கும் தீபாவளிச் சந்தை, இந்திய மரபுடைமை நிலையம், லிட்டில் இந்தியாவின் ஒளியூட்டு அலங் காரம் ஆகியவற்றை ‘சன்லவ்’ இல்லத்தைச் சேர்ந்த ஆறு முதியவர்கள் பார்வையிட்டனர்.

மாலை சுமார் நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை முதியவர்கள் சந் தையின் அழகில் திளைத்திருந் தனர். இவர்களின் கண்ணுக்கும் விருந்து, நாவுக்கும் விருந்தாக அமைந்தன கமலா உணவகத்தில் வழங்கப்பட்ட இந்திய உணவு வகைகள். சிங்கப்பூரின் முக்கிய பண்டிகைகளின்போது சுற்றுலா பயணம் செல்வது முதியோரின் வழக்கம் என்றும் அது அவர் களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கும் நட வடிக்கைகளுள் ஒன்றாக அமை கின்றது என்றும் கூறினார் சன்லவ் இல்லத்தின் நிலைய நிர் வாகி திருமதி தீபா மகேந்திரன், 29.