பல தலைமுறைக் குடும்பத்தின் தீபாவளிக் கொண்டாட்டம்

குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திருவாட்டி ராஜலட்சுமிக்கு வயது 90. ஆக இளையவரான இமானுவல் பிறந்து ஆறு மாதங்களே ஆகின்றன. இப்படி நான்கு தலைமுறையினரைக் கொண்ட இந்தக் குடும்பத்தில் இந்தியக் கலாசாரத்தோடு சீனக் கலாசாரமும் சங்கமித்துள்ளது. பிள்ளைகள் வளர வளர, படிப்பு, வேலை, திருமணம் என அவர்களின் வாழ்க்கைப் பாதையும் வெவ்வேறு வழிகளில் சென்றது. என்றாலும் உற்றார் உறவினர் அனைவரும் ஒன்றாகக் கூடி, பேசி, சிரித்து மனம் மகிழும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பர்.

உலகெங்குமுள்ள இந்துக்கள் கொண்டாடி மகிழும் தீபாவளித் திருநாள் ஆண்டுதோறும் அத்தகையதொரு வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது. எங்கெங்கு இருந்தாலும் தீபாவளியன்று ஒன்றாகக் கூடி, கொண்டாடிக் களிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர்கள் இன்றும் அந்த இன்பத்தில் மூழ்கித் திளைக்கக் காத்திருக்கின்றனர். படம்: திமத்தி டேவிட்