நெருக்கடியை உணர்ந்து பொறுப்பாக ஆடிய கார்த்திக்

கோல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஐந்து விக்கெட் தியாசத்தில் வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியாவும் வேகப்பந்து வீச்சா ளர் கலீல் அகமதும் இந்திய அணியின் அறிமுக வீரர்களாகக் களமிறங்கினர்.

முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் இருந்தே மளமளவென விக்கெட்டு களைப் பறிகொடுத்தது. கடைசி நேரத்தில் ஃபேபியன் ஆலன் அதிரடியாக ஆடி 27 ஓட்டங்களை எடுக்க, அந்த அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங் களைச் சேர்த்தது.

இலக்கை விரட்டிய இந்திய அணியும் நான்கு விக்கெட்டுகளை விரைவில் இழந்தாலும் மணீஷ் பாண்டே (19), தினேஷ் கார்த்திக் (31*), குருணால் பாண்டியா (21*) ஆகியோர் பொறுப்பாக ஆட, 13 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் வெற்றி பெற்றது. “ஒரு மூத்த வீரராக நெருக்க டியை ஏற்று, அணி வெல்ல உதவ விரும்பினேன். அதுவே அணியில் என் பங்கு,” என்றார் கார்த்திக்.

தான் காயமடைந்தாலும் பரவாயில்லை, அணி தேறவேண்டும் எனும் நோக்குடன் பாய்ந்து எல்லைக்கோட்டைத் தொட்டு ஓட்டக் கணக்கை உயர்த்திய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி

25 Mar 2019

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி