இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: வங்கிகளில் ரூ.50 கோடி மற்றும் அதற்கும் மேல் கடன் வாங்கி, திருப்பி செலுத் தாதவர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கியிடம் இந்தியாவின் மத்திய தகவல் ஆணையம் கேட்டது. இதுதொடர்பான வழக்கில், பெயர் பட்டியலை அளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் பெயர் பட்டியலை ரிசர்வ் வங்கி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “ரிசர்வ் வங்கி இணையத் தளத்தில் தகவல் பெறும் உரிமை சட்ட விதிமுறைகளைப் பின்பற்று வதாகக் கூறப்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு ஆணைய கூட்டத் தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், வெளிப்படைத் தன்மை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால், அவரது சொல் லுக்கும் செயலுக்கும் வேறுபாடு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தர வையும் அவர் மதிக்கவில்லை. “எனவே, உச்ச நீதிமன்றம் உத்தரவையும் மதிக்காமல், தகவல் ஆணையத்துக்குத் தகவல் அளிக்காததற்கு நீங்களே (உர்ஜித் பட்டேல்) பொறுப்பு என்று தகவல் ஆணையம் கருதுகிறது. “உங்களுக்கு ஏன் அதிகபட்ச அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கு 16ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு இந்த நோட்டீசை அனுப்புகிறோம்,” என்று ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதுபோல், வாராக் கடன்கள் பற்றி ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகம், மத்திய நிதி அமைச்சு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றைத் தகவல் ஆணையம் கேட்டுள்ளது.