ஹன்சிகா: வாய்ப்புகள் தேடி வருகின்றன

இனி புதிதாக எந்தக் குழந்தையையும் தத்தெடுக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார் ஹன்சிகா. காரணம், ஏற்கெனவே தத்தெடுத்த குழந்தைகளை நன்கு வளர்த்து ஆளாக்கி, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்தால் அதுவே போதும் என்று நினைக்கிறாராம். ”குழந்தைகளுக்காகவும் முதியோர், ஆதரவற்றோருக்காகவும் ஓர் ஆசிரமம் கட்டுகிறேன். இனி முன்புபோல ஒரு கவர்ச்சி பொம்மையாக என்னை திரையில் பார்க்க முடியாது.

வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்துள்ளேன். “சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததாக சொல்வதை ஏற்கமாட்டேன். கடந்த ஓராண்டில் மட்டும் 18 புதிய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அனைத்து கதைகளுமே என்னைக் கவரவில்லை. எனவே நான்கு படங்களில் மட்டுமே நடித்தேன்,” என்கிறார் ஹன்சிகா.