‘தீபாவளி குறித்த எண்ணம் மாறிவிட்டது’

‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ எனக் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார் பிரியா பவானி சங்கர். இளையர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு. தீபாவளிக்கு என்ன சிறப்பு? “தீபாவளிக்கு எனத் தனியாகப் புத்தாடைகள் வாங்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பண்டிகையை அமைதியாகத்தான் கொண்டாடுகிறோம். புகை வரும், சுற்றுப்புறச் சூழல் பாதிக்கும் என்றெல்லாம் காரணம் சொல்ல மாட்டேன். “பள்ளியில் படித்தபோது சிவகாசிக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள ஆலைகளில் சிறு குழந்தைகள் பலர் தங்கள் உடலை வருத்தி பட்டாசு களைச் செய்துகொண்டிருந்தனர். அப்போதே தீபாவளி குறித்த ஆர்வம், மகிழ்ச்சி, எண்ணம் என எல்லாமே மாறிவிட்டது,” என்கிறார் பிரியா. எனினும், தீபாவளியன்று இரவு நேரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் உட்கார்ந்து மற்றவர்கள் விடும் வாணவேடிக்கையை மட்டும் கண்டு ரசிப்பாராம்.