டூரின்: சாம்பியன்ஸ் லீக் காற்பந் தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வின் கோல் வேட்டை தொடர்ந்தா லும் அவரது யுவென்டஸ் குழு கடைசி நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிடம் 2=1 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தாரை வார்த்துவிட்டது. சொந்த அரங்கில் நடந்த ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த அற்புதமான கோல் மூலம் யுவென்டஸ் குழு முன்னிலைக்குச் சென்றது. ஆயி னும், 86வது நிமிடத்தில் யுவான் மாட்டா அடித்த கோல் மூலம் ஆட்டம் சமனுக்கு வந்தது.
ஆட்டம் முடிய இரு நிமிடங்களே இருந்தபோது யுவென்டசின் அலெக்ஸ் சாண்ட்ரோ சொந்த கோலடிக்க, வெற்றி யுனைடெட் வசமானது. இதனால் ஏமாற்றம் அடைந்த ரொனால்டோ, "எதுவும் செய்யாமலேயே யுனைடெட் வெற்றி பெற்றுவிட்டது," என்று தமது விரக்தியையும் வெளிப்படுத்தினார். நேற்று நடந்த மற்ற ஆட்டங் களில் மான்செஸ்டர் சிட்டி 6-0 என ஷக்தர் டோனட்ஸ்கையும் ரியால் மட்ரிட் 5-0 என விக்டோ ரியா பிளசனையும் வீழ்த்தின.
மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முதல் கோலை அடித்த யுவான் மாட்டா (வலது). படம்: ஏஎஃப்பி