சுமுகமான தலைமைத்துவ மாற்றம்: பிரதமர் லீ உறுதி

எதிர்வரும் தலைமைத்துவ மாற்றம் முன்னர் நடைபெற்றதைப் போலவே சுமுகமாக இருப்- பதை உறுதிசெய்ய சிங்கப்பூர் தலை வர்கள் ஆன அனைத்தையும் செய்து வருவ தாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சுயமான தலைமைத்துவ மாற்றம், அரசு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து குழுவாகச் செயல்படுவது ஆகியவை நாட்டின் கலாசார- மாக நிலைபெற வேண்டும் என்றார் அவர். “இது பொருத்தமான அடுத்த தலைவரைக் கண்டறிவது மட்டுமல்ல, சிங்கப்பூரை வழி- நடத் துவதற்குப் பொருத்தமான குழுவைக் கண்டறிவதுமாகும்,” என்றார் அவர். ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்துள்ள ‘தி டால் ஆர்டர்: தி கோ சோக் டோங் ஸ்டோரி’ நூலை நேற்று வெளியிட்டு பிரதமர் லீ உரையாற்றினார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த லீ குவான் இயூ, 1990ல் ஆட்சிப் பொறுப்பை திரு கோவிடம் ஒப்படைத்தபோது, சிங்கப்பூரின் முதல் தலைமுறைத் தலைவர்களிடமிருந்து இரண்டாம் தலைமுறைத் தலைவர்களிடம் பொறுப்பு மாறியது பற்றி இந்நூல் விவரிக்கிறது. நான்காம் தலைமுறைத் தலை வர்கள் இன்னும் சில ஆண்டுகளில் பொறுப்பேற்க தயார்ப்படுத்தப்பட்டுவரும் சரியான தரு- ணத்தில் தலைமைத்துவப் புதுப்பிப்பை முக்கிய கருவாகக் கொண்ட இந்த நூல், வெளியிடப்படுகிறது என்றார் திரு லீ. மக்கள் செயல் கட்சியின் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சி மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவை கட்சிக் உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தின் புக்கிட் தீமா வளாகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூல் ஆசிரியர் பே ‌ஷிங் ஹுவெய் (இடது) பிரதமர் லீயிடம் நூல் பிரதியை வழங்குகிறார். திரு கோ சோக் டோங் உடன் உள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்

18 Aug 2019

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்

‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Aug 2019

தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்

திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Aug 2019

துடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது