காரும் டாக்சியும் மோதிக்கொண்ட இரு வேறுபட்ட சம்பவங்கள்

ஒரு வாகனத்திற்கும் டாக்சிக்கும் இடையே நேற்று விடியற்காலை ஏற்பட்ட விபத்தில் டாக்சியில் பயணியாக இருந்த பெண் சிறு காயங்களுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நிக்கல் ஹைவே, மௌன்ட்பேட்டன் சாலை சந்திப்பில் காலை 3.18 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது. வலது பக்கம் வளைந்த கறுப்பு நிற டொயோட்டா கார் சாலையில் நேரே சென்றுகொண்டிருந்த டாக்சியின் வலது பக்கத்தில் மோதியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது. மோதலின் தாக்கத்தால் கறுப்பு காரின் பகுதிகள் சிதைந்து சாலையில் பறந்தன. இரு வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் காயங்கள் ஏதுமில்லை.

வெள்ளிக்கிழமை இரவு நார்த் போன விஸ்தா சாலை, ஹாலந்து சாலை சந்திப்பில் நடந்த மற்றும் ஒரு விபத்தில் 'மினி கூப்பர்' வாகனம் மோதியதில் டாக்சி ஒன்று தீப்பற்றிக்கொண்டது. 59 வயது டாக்சி ஓட்டுநர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். டாக்சி நேராகச் சென்றுகொண்டிருக்க, வலது பக்கமாக வளைந்த கார் அதில் மோதியபோது டாக்சி தீப்பற்றியது. டாக்சியின் கூரைப் பகுதி எரிந்துபோய் பெரிதும் சேதமடைந்திருந்தது. இரு சம்பவங்கள் குறித்தும் போலிஸ் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!