7,000 தெருநாய்களுக்கான தேசிய கருத்தடை திட்டம்

சிங்கப்பூரில் உள்ள தெருநாய்கள் எண்ணிக்கையைக் குறைக்க ஐந் தாண்டு கருத்தடைத் திட்டம் நேற்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான டெஸ்மண்ட் லீயால் தொடக்கி வைக்கப்பட்டது. புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள ஹில்லியன் மால் கடைத்தொகுதி யில் திரு லீ இத்திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். விலங்கு நலன், பொதுமக்கள் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் போன்ற விவகாரங்கள் தொடர்பில் தெருநாய்களால் அவ்வப்பொழுது பொதுமக்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

''சிலர் அக்கறை கொண்டு தெருநாய்களுக்குப் பரிவுடன் உணவளிக்கிறார்கள், சிலர் அவற்றைக் கண்டுகொள்வது இல்லை, வேறு சிலர் அச்சத்தில் அவற்றின் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அணுகுகிறார்கள்,'' என்று திரு லீ குறிப்பிட்டார். இவ்வாறு பலதரப்பட்ட விவகாரங்களைச் சமாளிக்கும் நோக்கில் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) தெருநாய்களின் எண் ணிக்கையைக் குறைக்கும் திட்டத் தைத் தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் தெருநாய் கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு மறுபடியும் விடுவிக் கப்படுகின்றன.

கையில் நாய்க்குட்டியுடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ (நடுவில்) சில நாய் உரிமையாளர்களுடன் உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!