உலகம் சுற்றும் கதாநாயகி

'குயின்' படத்தின் தமிழ்ப் பதிப்பான 'பாரிஸ் பாரிஸ்' வேகமாக வளர்ந்து வருகிறது. கங்கனா ரணவத்துக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த படம் இது. தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மறுபதிப்பு செய்கிறார்கள். தமிழ் மறுபதிப்பை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

"இந்தியில் பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது. ஆண், பெண் என சமூகத்தில் இருபாலராக இருக்கி றோம். ஆனால் நமக்குள்தான் எத்தனை வேறுபாடுகள்? "உடல் தொடங்கி மனம் வரை ஆயிரத்தெட்டு வித்தியாசங்கள். பெண் மனதின் ஆழம் எவருக்கும் பிடிபட்டதில்லை. இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண்ணுக்கு அறிமுகமாகும் ஆண், அவளுக்கு நல்ல, நெருங்கிய நண்பராக மாற முடியும், பல வகைகளிலும் உதவ முடியும் என்பதைச் சொல்ல வருகிறது 'பாரிஸ் பாரிஸ்'," என்கிறார் ரமேஷ் அரவிந்த்.

தமிழ்ப் பதிப்பில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு இந்தப் படம் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தரும் எனப் படக்குழுவினர் கூறுகின்றனர். காஜலும் இதை இருநூறு விழுக்காடு நம்புகிறார் என்பதை அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது.

"பாரதிராஜா, பாலச்சந்தர் படங்களில் நடிக்கும் பெண்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு வேடத்தையே இப்படத்தில் ஏற்றுள்ளேன். 'அவள் ஒரு தொடர்கதை' சுஜாதா போல், 'சந்திரமுகி' ஜோதிகா போல் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் வேடம். ஓர் இயக்குநராக ரமேஷ் சார் என்னிடம் என்ன எதிர்பார்த்தாரோ அதைக் கொடுத்திருக்கிறேன்," என்கிறார் காஜல்.

விருது பெறும் அளவுக்கு அற்புதமாக நடித்திருந்த கங்கனாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடித்துள் ளாராம் காஜல். அதேசமயம் எந்த ஒரு கட்டத்திலும் கங்கனாவின் சாயல் தமது நடிப்பில் பிரதிபலிக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தாராம்.

"இது மறுபதிப்பு என்றாலும் 'குயின்' படத்தை அப்படியே காட்சிப்படுத்தவில்லை. மறுபதிப்பு என்றால் கதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயக்கு நரின் தனிப்பட்ட கைவண்ணமும் இருக்க வேண்டும் என்பதே தனது கருத்து," என்கிறார் ரமேஷ் அரவிந்த்.

'குயின்' படத்தை ஒரு ரசிகராகப் பார்த்தபோது மனதைக் கவர்ந்துவிட்டதாம். அதன்பிறகே அப் படத்தை மறுபதிப்பு செய்ய வேண்டும் எனும் ஆவலும் ஆசையும் மனதில் ஏற்பட்டது என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!