அசாமில் 18 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்குப் பகுதி- யிலுள்ள அசாம் மாநிலத்தின் மருத்துவமனை ஒன்றில் அடுத்- தடுத்து 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழு- வதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநில ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கடந்த 9 நாட்களில் மட்டும் 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரி விக் கின்றன. இந்தக் குழந்தைகள் அனைத்தும் பிறந்து ஓரிரு நாட்களே ஆனவை. இதனை அடுத்து, மருத்துவக் கல்வித் துறையின் இயக்குநர் தலை- மையில் விசாரணைக்கு சுகா தாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தச் பச்சிளம் குழந்தை- களின் உயிரிழப்பை ஜோர்ஹாட் மருத்துவமனையின் முதல்வர் டெபஜிட் ஹஸாரிகா உறுதி செய்துள்ளார். மருத்துவமனையில் உள்ளேயே விசாரணைக்கு உத்த ரவிட்டு அறிக்கை தாக்கல் செய்- யப்பட்டுள்ளதாக கூறினார். அம்மருத்துவமனையில் குழந்- தைகளுக்கான சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த 15 குழந்- தைகள் உயிரிழந்ததாக கூறப்படு கிறது. இதில் 10 குழந்தைகள் பிறக் கும்போதே குறைவான எடை- யுடன் பிறந்ததே உயிரிழப்புக்குக் காரண மாகச் சொல்லப்படுகிறது. மற்ற மூன்ற குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததா- கவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அம்மருத்துவ- மனையில் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் 40 குழந் தை- களைப் பராமரிப்பதற்கான இட வசதி மட்டுமே உள்ளது. அதே சமயம் இம்மாதம் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை பல குழந்தைகள் கட்டில் களைப் பகிர் வதன் மூலம் 80 குழந்தை- களுக்கு அங்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. இதனால் கூட அக்குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!