என்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்

இந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார மன்றத்தின் ஏற்பாட் டில் நடந்தேறியது தீபாவளி இரவு 2018. சுமார் 350 பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வினை இந்திய கலாசார மன்றம், சீக்கிய மன்றம், இந்து மன்றம் மற்றும் என்யுஎஸ் நாச் என நான்கு மன்றங்கள் ஒருங் கிணைந்து நடத்தின. நிகழ்ச்சி வழக்கமான குத்து விளக்கு ஏற்றலுடனும் வரவேற்பு நடனத்துடனும் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ‘பிரின்ஸ் ஜார்ஜ் பார்க்’ குடியிருப்பில் தொடங்கியது.

லட்டு உண்ணும் போட்டி, சேலை கட்டும் போட்டி எனப் பல சுவாரசியமான அங்கங்களோடு ஆடல், பாடல் என்று களைகட்டிய நிகழ்வின் உச்சகட்டமாக, அனை வரும் கலந்துகொள்ளக் கூடிய நடன மேடை ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மலாய் மாணவர்களின் ‘டிகிர் பாராட்’ எனும் குழுவாகப் பாடும் அங்கம் நடைபெற்றது.

அதில் பாடிய மாணவர்கள் மலாய் பாடல்களோடு பிரபல இந்திய திரையிசைப் பாடல்களைப் பாடி, பார்வையாளர்களையும் அவர்களுடன் சேர்ந்து பாடும்படி ஊக்குவித்தனர். “மற்ற பல்கலைக்கழக அமைப் புகளுடன் இணைந்து பணியாற் றுவது சவால்மிக்கதாக இருந் தாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் களிடையே நாங்கள் ஏற்பாடு செய் திருந்தவை நல்ல வரவேற்பைப் பெற்றது மனமகிழ்ச்சியை அளிக் கக்கூடியதாக இருந்தது.

படங்கள்: எர்பென் ஷட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Feb 2019

ஒரே இலக்கில் உறுதியோடு  பயணம்

கடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள். 

18 Feb 2019

இளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’