நவம்பர் 22ல் பாஜக எதிர்ப்புக் கட்சிகள் கூடுகின்றன; நாயுடு மும்முர முயற்சி

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு வியூகங்களை வகுக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் இம்மாதம் 22ஆம் தேதி புதுடெல்லியில் சந்திக்க இருக்கின்றன என்று ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கிறார். புதுடெல்லி கூட்டத்தில் எல்லா கட்சி களுக்கும் பொதுவான அரசியல் தளம் வகுக்கப்படும் என்றும் எதிர்கால நட வடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி சார்பில் அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அசோக் கெலாட் ஆந்திராவின் விஜயவாடா நகர் சென்று திரு நாயுடுவை சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இந்த விவரங்களை ஆந்திர முதல்வர் அறிவித்தார். 'ஜனநாயகத்தைக் காப் போம், இந்தியாவைக் காப்போம்' என்ற கோட்பாட்டின் கீழ் ஒவ்வொருவரையும் ஒருங்கே கொணர தாங்கள் முடிவு செய் திருப்பதாக நாயுடு குறிப்பிட்டார். "அடுத்த ஆண்டு தேர்தலில் இரண்டே இரண்டு தரப்புகள்தான் இருக் கும்.

ஒன்று பாஜக. மற்றொன்று எதிர்க் கட்சி. இந்தியாவின் அரசியல் கட்சிகள், தாங்கள் எந்தத் தரப்பை நாடுவது என் பது பற்றி முடிவுசெய்யவேண்டியது இருக் கும். எங்கள் பக்கம் வரவில்லை என்றால் வராத கட்சிகள் பாஜகவை ஆதரிப்பதாக அர்த்தம்," என்றார் திரு நாயுடு. இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக் கும் நோக்கத்துடன் தான் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தான் சந்தித்த தாகவும் தெரிவித்த திரு நாயுடு, மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தாவை இம்மாதம் 19 அல்லது 20ஆம் தேதி தான் சந்திக்கவிருப்பதாகவும் கூறினார். பாஜகவை விரும்பாத பல கட்சிகளின் தலைவர்களைத் தான் சந்தித்து இருப்ப தாகவும் திரு நாயுடு தெரிவித்தார்.

"எங்கள் அனைவருக்கும் ஜனநாயகத் தைக் காப்போம், இந்தியாவைக் காப்போம் என்பதே தாரக மந்திரமாக இருக்கும்," என்று திரு நாயுடு குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர் வதைத் தற்காத்து பேசிய திரு நாயுடு, எல்லா கட்சிகளும் தங்களுக்கு இடை யிலான சிறுசிறு பிரச்சினைகளை மறந்து விட்டு நாட்டைக் காப்பதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். "டெல்லியில் நடக்கவிருக்கும் கூட்டம் எல்லா பிரச்சினைகளைப் பற்றியும் விவா திக்கும். வருங்காலத்தில் எப்படி எப்படி யெல்லாம் செயல்படவேண்டும் என்பதற் கான திட்டங்களைத் தீட்டும். பாஜகவுக்கு எதிரான நிலையைப் பலப்படுத்தும்.

"இப்போது ஒவ்வொருவரும் எங் களுடன் ஒத்துழைக்க விரும்புகிறார்கள். இந்த முயற்சியில் காங்கிரஸ்தான் முக் கிய எதிர்க்கட்சி. அதற்கு அதிக பொறுப்பு இருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்," என்று ஆந் திர முதல்வர் குறிப்பிட்டார். இந்தியாவில் இப்போது நடக்கின்ற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு சில கட்சிகள் தங்கள் அணிக்கு வரும் என்று குறிப்பிட்ட திரு நாயுடு, ஒவ்வொருவரை யும் ஈர்ப்பதே இலக்கு என்றார்.

நாட்டில் இப்போது நிலவும் பல பொருளியல் பிரச்சினைகளுக்கு மோடிதான் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார். வருமான வரித் துறையைப் பயன் படுத்தி எதிர்த்தரப்பு தலைவர்களை ஒடுக்க பாஜக முயன்று வருவதாகவும் திரு நாயுடு குறைகூறினார். செல்லா நோட்டு நடவடிக்கை தோல்வி கண்டுவிட்டது என்றும் அவர் பாஜக மீது புகார் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!