ஸ்பர்ஸின் தொடர் வெற்றியை உறுதி செய்த யுவான்

செல்ஹர்ஸ்ட் பார்க்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் காலடி எடுத்து வைத்த முதல் அனுபவமே சிம்மசொப்பனமாக விளங்கியது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணி யின் தற்காப்பு வீரர் யுவான் ஃபொய்த்துக்கு. கடந்த வாரம் உல்வ்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமது ஸ்பர்ஸ் அணிக்கு எதிராக இரண்டு பெனால்டி வாய்ப்புகளை விட்டுக்கொடுத்து தமது அணி 2-3 என தோற்கக் காரணமாக இருந்தார். ஆனால், நேற்று முன்தினம் கிறிஸ்டல் பேலஸ் அணியின் சொந்த மைதானமான செல் ஹர்ஸ்ட் பார்க்கில் நடைபெற்ற காற்பந்துப் போட்டியில் ஆட்டத் தின் ஒரே கோலை தமது ஸ்பர்ஸ் அணிக்காக ஃபொய்த் போட்டார்,

வெற்றியையும் தேடித் தந்தார். ஆட்டத்தின் 66ஆம் நிமிடத்தில் தம்தை நோக்கி வந்த பந்தை தலையால் முட்டி ஸ்பர்ஸ் வெற்றி பெற உதவினார். இதன்மூலம், ஸ்பர்ஸ் அணி லீக்கில் ஏழாவது தொடர் வெற் றியைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. "முதல் பாதி ஆட்டம் சிரமமாக இருந்தது, ஆனால் இதில் முக்கிய மான அம்சம் என்னவெனில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்," என்று மகிழ்ச்ச்சி பொங்கக் கூறிய ஃபொய்த், "உல்வ்ஸ் அணிக்கு எதிராக நான் விட்டுக்கொடுத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளி லிருந்து நான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. "அதற்கான பயிற்சியில் ஈடு பட்டு வந்தாலும், அந்த இரு வாய்ப்புகளை விட்டுக்கொடுத்தது சிறந்த அனுபவமாக விளங்கியது," என்றார்.

கிறிஸ்டல் பேலஸின் அலெக்சாண்டர் சோர்லோத், ஜோர்டன் ஆயூ ஆகியோரைக் கடந்து உயரே தாவி தனது குழுவின் ஒரே வெற்றி கோலைப் போடுகிறார் ஸ்பர்ஸ் குழுவின் இளம் ஆட்டக்காரர் யுவான் ஃபொய்த் (நடுவில்). வலக்கோடியில் ஸ்பர்ஸ் குழுவின் மற்றோர் ஆட்டக்காரர் விக்டர் வன்யாமா. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!