தனிமை உணர்வளிக்கும் சமூக ஊடகங்கள்

அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு தனிமை உணர்வை யும் மன அழுத்தத்தையும் அதிகரிப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. ‘ஃபேஸ்புக்’, ‘ஸ்னேப்சாட்’, ‘இன்ஸ்டகிராம்’ போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன் படுத்துவது நலவாழ்வைப் பாதிக்கக்கூடும் என்றும் அது குறிப்பிடுகிறது. இத்தகைய சமூக ஊடகங் களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், செய்து முடிக்க வேண்டிய பணிகள் கிடப்பில் இருப்பதும் அவற்றைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மன அழுத்தம் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பென்சில் வேனியா பல்கலைக்கழக மாண வர்கள் 143 பேரிடம் ஃபேஸ்புக், ஸ்னேப்சாட், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகங்களை அதிக நேரம் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயன்பாட்டுக்கு முன்னும் பின்னும் அவர்களது மன நிலை, நல்வாழ்வு போன்றவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுக்கு உட்பட்டவர்களில் பெரும்பாலா னோர் இளையர்கள் என்று கூறப்பட்டது.

இந்த மூன்று சமூக ஊடகத் தளங்களிலும் அதிக நேரம் செலவிட்டு ஆய்வுக்கு உட்பட் டவர்களிடையே பதற்றம், மன அழுத்தம், தனிமை போன்றவை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஊடகங்களில் செலவிட்ட நேரத்தைக் குறைத்தபோது அவர் களது நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தம், தனிமை போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது. கோப்புப்படம்