மார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு

மார்பகப் புற்றுநோய் நமது சமூகத்திடையே முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக நிலவி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது இரட்டிப்பாகியுள்ள தாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. சிங்கப்பூரில் இந்தியப் பெண்களிடையே 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 615 பேருக்கு இந்நோய் ஏற்பட்டிருப்பது பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருக்கும் பெண் களைவிட சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் வசிக்கும் இந்திய இனத்தவரிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது.

அதிக உடல் உழைப்பு இல்லாதது, உடற்பருமன் அதிகரிப்பு போன்ற வாழ்க்கை முறை சார்ந்த அம்சங்களால் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மஞ்சள், இஞ்சி, மிளகு, கிராம்பு, சீரகம் போன்ற புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் கொண்ட சமையல் பொருட்கள் இந்தியாவில் அதிகம் பயன்ப டுத்துவதும் அங்கு மார்பகப் புற்று நோயின் தாக்கம் குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக் கக்கூடும் என்று கூறப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப் படக்கூடியது என்பதும் அதற்கான சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமில்லை என் பதும் ஆறுதலான விஷயங்கள்.

உதாரணமாக, நான்காம் நிலை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுடன் ஒப்பிடுகை யில் முதல்நிலை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள் ளவர்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் 90%. கடந்த பல ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வழியாக மார்பகப் புற்றுநோய் பற்றி தற்போது தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பல விதமான மார்பகப் புற்று நோய்கள் வெவ்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றுக்கேற்ப சிகிச்சைகளும் மாறுபடும். தற்போது சிகிச்சை முறைகள் பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளன.

ஆரம்பத்திலேயே நோயைக் கண்டுபிடிப்பதும் சிகிச்சை அளிப்பதும் நீண்ட ஆயுளுடன் தரமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்கிறார் திரு பாலமுருகன் ஏ வெள்ளையப்பன் (படம்).

 சுகாதாரமான எடையுடன் துடிப்புடன் செயல்படுவது.

 புகை, மதுப் பழக்கத்தைக் கைவிடுவது.

 சரியான வயதில் குழந்தை பெறுவது, குழந் தைக்குப் பாலூட்டுவது.

 மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை களை சீரான இடைவெளியில் மேற்கொள்வது.

 அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவ உதவி நாடுவது.