மந்திரங்கள் இல்லை; திருக்குறள் படிக்கச் சொல்லி திருமணம் செய்துகொண்ட மத்திய அரசு ஊழியர்

அரியலூர்: திருக்குறளை வாசிக்கச் செய்து திருமணம் செய்துகொண்ட மத்திய அரசு ஊழியருக்குப் பல்வேறு தரப்பின ரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். ஜெ ய ங் கொ ண் ட த் தை ச் சேர்ந்த சக்திவேல் மத்திய அரசு ஊழியராவார். இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் அண்மை யில் திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்கான ஏற்பாடு கள் நடந்துவந்த நிலையில் தமது இல்லற வாழ்க்கை திருக்குறளின் உதவியோடு தொடங்கவேண்டும் என விரும்பியுள்ளார் சக்திவேல். இதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த மணமகளின் குடும் பத்தாரும் திருக்குறள் மீது சக்திவேல் கொண்டுள்ள பற்றின் காரணமாக அவரது முடிவினை ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து திருமண நாளன்று திருவள்ளுவர் உருவச் சிலையை வைத்து, புலவர் மோகன் திருக்குறள்களை வாசித் தார். இதையடுத்து மணமகளுக்கு திருமாங்கல்யம் அணிவித்த கையோடு மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றினார் சக்திவேல். திருக்குறளை ஒலிக்கச் செய்து திருமணம் செய்த சக்தி வேலின் தந்தை சொந்த ஊரில் தேநீர்க் கடை நடத்தி வருகிறார். தனது தந்தை பிறருடன் பேசும் போது அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவார் என் றும், அதனால் சிறுவயது முதலே திருக்குறள், தமிழ் மொழியின் மீது தமக்குத் தீராத பற்று ஏற்பட்டதாகவும் கூறுகிறார் மணமகன் சக்திவேல்.

இவரது தமிழ்ப் பற்றையும், தமிழர்கள் வழியில் திருமணம் செய்து கொண்டிருப்பதையும் பாராட்டுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் வாழ்த்தி உள்ளனர். இது தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிப்பதாக புதுமணத் தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

Loading...
Load next