ஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்

ஆசியான் உச்சநிலைக் கூட்டம் நடைபெறும்போது, நிலத்திலும் கடலிலும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணிகளுக்கு சிங்கப் பூர் போலிஸ் படை 5,000- அதிகாரி களை அமர்த்தி உள்ளது. 33ஆம் முறையாக நடைபெறும் இந்தக் கூட்டம் சன்டெக் சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பல அமைப்புகளின் ஒன்றிணைந்த முயற்சி தேவைப்பட்டதாக போலிஸ் படையின் செயலாக்க இயக்குநர் ஹாவ் குவாங் ஹுவீ தெரிவித்தார்.

"பாதுகாப்புக்கு போலிஸ் பொறுப்பு. இதில் உள்துறை அமைச்சின் வெவ்வேறு பிரிவு களைச் சேர்ந்த சீருடை அமைப்பு களும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளும் எங்களை ஆதரிக்கின்றன," என்று மூத்த உதவி ஆணையாளர் ஹாவ் கூறினார். இந்த மாநாட்டில் 22 தலைவர் கள் கலந்துகொள்கின்றனர். இவர் களில் ஒருவரான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சிங்கப்பூருக்கு வருவது இதுவே முதல்முறை. மாநாட்டு நிலையத்தைச் சுற்றி உள்ள பகுதி, மேம்பட்ட பாதுகாப்பு கொண்ட சிறப்பு நிகழ்ச்சி இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் பாது காப்பு மேம்படுத்தப்படும். நகர்ப் பகுதிக்கு மத்தியில் இந்த பாதுகாப்புப் பணிகள் செய்யப் படுவது அரிது என்று மத்திய போலிஸ் பிரிவின் தலைவர் துணை உதவி ஆணையாளர் கிரெகரி டான் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தங்கியிருந்த செயிண்ட் ரெஜிஸ் சிங்கப்பூர் ஹோட்டலுக்கு வெளியே அதிகாரிகள் சுற்றி நிற்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!