மின் வர்த்தக உடன்பாட்டில் ஆசியான் நாடுகள் கையெழுத்து

இந்த வட்டாரத்திற்குள் எல்லை தாண்டிய மின் வர்த்தகப் பரிவர்த்தனைகள் தங்குதடையின்றி செயல்பட வழிவகுக்கும் உடன்பாட்டில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பத்து பொருளியல் அமைச்சர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். கடந்த ஜூன் மாதம் தொடங் கிய இந்த உடன்பாட்டுக்கான பேச்சு வார்த்தைகள் ஒன்பது சுற் றுகளைக் கடந்து நேற்று கையெ ழுத்தானது. ஆசியான் குழுமத்தில் செய்துகொள்ளப்பட்ட முதலாவது மின் வர்த்தக உடன்பாடு இது என்பது குறிப் பிடத்தக்கது.

எல்லை தாண்டிய மின் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதைத் தவிர, இந்தப் புதிய உடன்பாடு மின் வர்த்தகத்தைப் பயன்படுத்து வதில் நம்பிக்கையை வலுப்படுத் தும் என்று நேற்று நடைபெற்ற 17வது ஆசியான் பொருளியல் சமூக மன்றக் கூட்டத்தில் பேசிய போது சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார். வர்த்தகங்களுக்கிடையேயும் அர சா ங் க ங் களுக் கிடையேயு ம் காகிதமில்லா வர்த்தகம் புரிய இந்த உடன்பாடு ஊக்கப்படுத் தும். அதன் மூலம் ஆசியான் நாடுகளுக்கிடையே இன்னும் விரைவான, ஆற்றல்மிக்க பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த முடியும் என்றும் திரு சான் சொன்னார்.

நிலையான பொருளியல் வளர்ச்சியும், மின்னிலக்க முறை களை அதிகம் பயன்படுத்தும் இளைய மக்கள் தொகையும் ஆசியான் இணைய பொருளி யலை முன்னெடுத்த செல்லும் முக்கிய காரணங்கள். இது வரும் 2025ஆம் ஆண் டுக்குள் 200 பில்லியன் அமெ ரிக்க டாலர் வருமானத்தை ஈட்ட முடியும். அதில் 88 மில்லியன் அமெரிக்க டாலர் மின் வர்த்தகத் தின் மூலம் வரக்கூடியது. இந்த வட்டாரத்தின் ஈர்ப்புத் தன்மையால் எமேசான், அலிபாபா போன்ற வெளிநாட்டு நிறுவனங் கள் இங்கு வர்த்தகம் புரிகின்றன என்று கூறினார் திரு சான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!